மோட்டார் சைக்கிள், மின்கம்பத்தில் மோதி தீப்பிடித்து எரிந்த மினி வேன்- டிரைவர் படுகாயம்

மோட்டார் சைக்கிள், மின்கம்பத்தில் மோதி தீப்பிடித்து மினி வேன் எரிந்தது. டிரைவர் படுகாயம் அடைந்தார்.

Update: 2023-03-14 20:52 GMT

சோழவந்தான், 

சோழவந்தானில் இருந்து நாச்சிகுளம் நோக்கி மினி வேன் சென்று கொண்டிருந்தது. கருப்பட்டி ெரயில் நிலையம் அருகே மினி வேன் சென்று கொண்டிருந்தது. அப்போது வேன் கட்டுப்பாட்டை இழந்து, ஒரு மின் கம்பம் அருகே ஜெயசீலன் என்பவர் நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. மேலும் அந்த வேன், மின் கம்பத்தின் மீதும் மோதியதால் மோட்டார் சைக்கிளும், மினி வேனும் தீப்பற்றி எரிந்தன. இதுகுறித்து தகவல் அறிந்ததும் சோழவந்தான் தீயணைப்பு நிலைய அலுவலர் பசும்பொன் தலைமையில் தீயணைப்புபடையினர் சம்பவ இடத்துக்கு சென்று மேலும் தீ பரவாமல் தீயை அணைத்தனர். படுகாயம் அடைந்த வேன் டிரைவர் தர்மராஜை மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.வேன் மோதியதில் மின்கம்பம் ரோட்டில் சாய்ந்ததால் அந்த பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதுகுறித்து சோழவந்தான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்