அரசு பஸ்சின் அடியில் மோட்டார் சைக்கிள் சிக்கி விபத்து: தலை சிதறி 2 பேர் பலி- உசிலம்பட்டி அருகே பரிதாபம்

அரசு பஸ்சின் அடியில் மோட்டார் சைக்கிள் சிக்கிய விபத்தில் தலை சிதறி 2 பேர் உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியது.

Update: 2022-11-01 19:35 GMT

உசிலம்பட்டி,

அரசு பஸ்சின் அடியில் மோட்டார் சைக்கிள் சிக்கிய விபத்தில் தலை சிதறி 2 பேர் உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியது.

மோட்டார் சைக்கிளில் சென்றனர்

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள திருவாழவாயநல்லூரை சேர்ந்தவர்கள் கார்த்திக்(வயது 30), சிங்கராஜ்(45). 2 பேரும் உறவினர்கள்.

சில நாட்களுக்கு முன்பு கார்த்திக் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து கார்த்திக், சிங்கராஜூடன் மோட்டார் சைக்கிளில் தேனி மாவட்டம் சின்னஓவுளாபுரம் கிராமத்திற்கு சென்று, எலும்பு முறிவுக்கு கட்டு போட்டுள்ளார். பின்னர் அங்கிருந்து மீண்டும் திருவாழவாயநல்லூருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

தலை சிதறி பலி

உசிலம்பட்டி அருகே செட்டியபட்டி என்ற இடத்தில் வந்தபோது, அந்த வழியாக மதுரையில் இருந்து போடியை நோக்கி அரசு பஸ் சென்றது. எதிர்பாராதவிதமாக ேமாட்டார் சைக்கிள் நிலைதடுமாறியது.

பஸ்சும்-மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டன. இதில் 2 பேரும் பஸ்சின் அடிசில் சிக்கி தலைசிதறி பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி தாலுகா போலீசார், 2 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்