ஆம்புலன்ஸ் மீது மோட்டார் சைக்கிள் மோதல்; காங்கிரஸ் பிரமுகர் சாவு

மார்த்தாண்டம் அருகே ஆம்புலன்ஸ் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் காங்கிரஸ் கட்சி பிரமுகர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2023-07-08 18:45 GMT

குழித்துறை:

மார்த்தாண்டம் அருகே ஆம்புலன்ஸ் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் காங்கிரஸ் கட்சி பிரமுகர் பரிதாபமாக இறந்தார்.

காங்கிரஸ் நிர்வாகி

மார்த்தாண்டம் அருகே மாராயபுரம் குழிஞ்ஞ விளாகத்து விளை பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணபிள்ளை. இவருடைய மனைவி கோமளவல்லி (வயது 70). இவர்களுடைய மகன் சுதீர் (45), விளாத்துறை காங்கிரஸ் கமிட்டி செயலாளராக இருந்தார். மேலும் பழைய கார்கள் வாங்கி விற்பனை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகவில்லை.

இந்தநிலையில் சுதீர் நேற்று மதியம் மார்த்தாண்டத்தில் இருந்து வீடு நோக்கி மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். வெட்டுமணியை தாண்டி சென்னித்தோட்டம் பகுதியில் சாலையில் சென்று கொண்டிருந்த போது முன்னால் ஆம்புலன்ஸ் சென்றது. இந்த வாகனத்தின் பின்பக்க டயரில் மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக மோதியது.

விபத்தில் சாவு

கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த சுதீர் அதே இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். இதுபற்றி தகவல் அறிந்ததும் மார்த்தாண்டம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆம்புலன்ஸ் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் காங்கிரஸ் நிர்வாகி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்