கன்றுக்குட்டி மீது மோட்டார் சைக்கிள் மோதல்; ஐ.டி.ஐ. பயிற்சியாளர் பலி

கடலூர் முதுநகர் அருகே கன்றுக்குட்டி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஐ.டி.ஐ. பயிற்சியாளர் பலியானார்.

Update: 2023-02-11 19:14 GMT

கடலூர் முதுநகர், 

பரங்கிப்பேட்டை மீன் மார்க்கெட் தெருவை சேர்ந்தவர் சார்லஸ் தேவாரம் மகன் மனோஜ்(வயது 42). இவர் திண்டிவனத்தில் உள்ள அரசு ஐ.டி.ஐ.யில் பயிற்சியாளராக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று மாலை பரங்கிப்பேட்டையில் இருந்து கடலூர் நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். குடிகாட்டில் வந்தபோது சாலையை கடக்க முயன்ற கன்று குட்டி மீது மனோஜ் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மோதியது.

விபத்தில் பலி

இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட மனோஜ், சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் கன்று குட்டியும், அதே இடத்தில் செத்தது. இதுபற்றி தகவல் அறிந்ததும் கடலூர் முதுநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மனோஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்