ஊத்துக்கோட்டை அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதல்; கொத்தனார் பலி

ஊத்துக்கோட்டை அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் கொத்தனார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Update: 2022-06-21 09:28 GMT

ஊத்துக்கோட்டை அருகே உள்ள கூனிபாளையம் கோவில் தெருவை சேர்ந்தவர் பழனி. இவரது மகன் சரவணன் (வயது 16). அதே கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் சிவகுமார் (14). இதில் சரவணன் கூனிபாளையத்தில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பும், சிவகுமார் 9-ம் வகுப்பும் படித்து வருகின்றனர். நேற்று இவர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் சீதஞ்சேரி புறப்பட்டனர்.

அம்மம்பாக்கம் டாஸ்மாக் கடை அருகே சென்று கொண்டிருந்த போது எதிரே சென்னை பெரம்பூர் மங்கலாபுரம் 3-வது தெருவை சேர்ந்த கொத்தனார் ராஜசேகர் (வயது 54), இவரது மகள் நான்சி (23) ஆகியோர் வந்த மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் 4 பேரும் தூக்கி வீசப்பட்டனர். படுகாயமடைந்த ராஜசேகர், நான்சி, சரவணன், சிவகுமார் ஆகியோரை திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜசேகர் உயிரிழந்தார். மற்ற 3 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து பென்னலூர்பேட்டை இன்ஸ்பெக்டர் குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்