மோட்டார் சைக்கிள்கள் மோதல்; 3 பேர் படுகாயம்

பொள்ளாச்சியில் மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2022-06-06 16:05 GMT

பொள்ளாச்சி, 

பொள்ளாச்சி அருகே உள்ள பாறைமேட்டை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 24), தனியார் நிறுவன ஊழியர். இந்தநிலையில் நேற்று அவர் மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்று கொண்டிருந்தார். நகராட்சி அலுவலகம் அருகே சென்ற போது, எதிரே ஒரு வழிப்பாதையில் வந்த மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் மணிகண்டன், மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த குமரன் நகரை சேர்ந்த கார்த்திக் (22), சீனிவாசன் (22) ஆகிய 3 பேர் படுகாயமடைந்தனர். இதற்கிடையில் அந்த வழியாக வந்த அரசு பஸ் சக்கரத்தில், மணிகண்டனின் மோட்டார் சைக்கிள் சிக்கி சிறிது தூரம் இழுத்து செல்லப்பட்டது.

படுகாயமடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மணிகண்டன், கார்த்திக் ஆகியோர் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த பொள்ளாச்சி கிழக்கு போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் கார்த்திக் குடிபோதையில் விதிமுறையை மீறி ஒருவழிப்பாதையில் வந்து விபத்தை ஏற்படுத்தியது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்