மோட்டார் சைக்கிள், செல்போன் திருட்டு

மோட்டார் சைக்கிள், செல்போன் திருடுப்போனது

Update: 2022-12-18 19:53 GMT

பேரையூர், 

டி.கல்லுப்பட்டி அருகே உள்ள முத்துலிங்காபுரத்தை சேர்ந்தவர் ஆனந்தராஜ் (வயது 30). இவர் சம்பவத்தன்று டி.கல்லுப்பட்டியில் உள்ள தியேட்டர் அருகில், மது அருந்திவிட்டு குடிபோதையில் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு தூங்கிவிட்டார். பின்னர் தூங்கி எழுந்து பார்த்தபோது தனது மோட்டார் சைக்கிளும், சட்டைபையில் இருந்த செல்போனும் திருடு போயிருந்தது தெரிய வந்தது. இது குறித்து ஆனந்தராஜ் டி.கல்லுப்பட்டி போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்கு பதிவு செய்து, மோட்டார் சைக்கிளையும் செல்போனையும், திருடிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்