மோட்டார் சைக்கிள் எரிந்து சேதம்
மோட்டார் சைக்கிள் எரிந்து சேதம் அடைந்தது.
ஒரத்தநாடு அருகே உள்ள மேல உளூர் காமராஜர் காலனியை சேர்ந்தவர் ஞானசுந்தரம் (வயது37). விவசாயி. இவர் நேற்று முன்தினம் இரவு காட்டுக்குறிச்சிக்கு செல்லும் வழியில் உள்ள விவசாய நிலத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். பிறகு மோட்டார் சைக்கிளை சாலையோரம் நிறுத்திவிட்டு தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்தார். அப்போது அவருடைய மோட்டார் சைக்கிள் திடீரென தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது. இதுகுறித்து ஞானசுந்தரம் ஒரத்தநாடு போலீசில் புகார் கொடுத்தார். அதில் அடையாளம் தெரியாத 3 பேர் தனது மோட்டார் சைக்கிளை தீயிட்டு கொளுத்தி விட்டு தப்பி ஓடி விட்டதாக கூறி உள்ளார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.