அக்னிபாத் திட்டம் குறித்து மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வு ஊர்வலம்

அக்னிபாத் திட்டம் குறித்து மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

Update: 2022-10-29 19:14 GMT

பொதுமக்களிடையே அக்னிபாத் மற்றும் அக்னிவீரர் குறித்தும், இந்திய ராணுவத்தின் பீரங்கி படைப்பிரிவின் 75-ம் ஆண்டு டைமண்ட் ஜூபிலி யைக் கொண்டாடும் விதமாக இந்திய ராணுவ வீரர்களின் மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தில் லெப்டினன்ட் கர்னல் மனோஜ் தலைமையில் 10 ராணுவ வீரர்கள் கலந்து கொண்டனர். கடந்த 23-ந்தேதி ஐதராபாத்தில் தொடங்கிய இந்த ஊர்வலம் ராமேசுவரம் தனுஷ்கோடியில் இருந்து புறப்பட்டு திருச்சிக்கு நேற்று காலை வந்ததடைந்தது. அவர்களுக்கு மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள 117 பட்டாலியன் கருடா கேட் அருகே திருச்சி நிலைய கமாண்டர் கர்னல் தீபக் மோட்டார் சைக்கிளில் வந்த ராணுவ வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தார். இதில் என்.சி.சி. மாணவர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் சார்பில் பேண்டு வாசித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து செயின்ட் ஜேம்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் அக்னிபாத் மற்றும் அக்னி வீரர் பற்றி கணிணி வழியாக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதை தொடர்ந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) ராணுவ வீரர்களின் மோட்டார் சைக்கிள் ஊர்வலத்தை திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் ஆகியோர் தொடங்கி வைக்கிறார்கள். இந்த ஊர்வலம் புதுச்சேரி, சென்னை, ஸ்ரீகரிகோட்டா வழியாக ஐதராபாத்துக்கு சென்றடைகிறது. ராணுவ அதிகாரி லெப்டினன்ட் கர்னல் அஜய் குமார், தலைமையில், சூப்பிரண்டு கணேசன் மற்றும் சுபேதார் சதாசிவன் ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்