மோட்டார் சைக்கிளுக்கு தீவைப்பு

மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்து எரிக்கப்பட்டது.

Update: 2023-07-23 20:04 GMT

காரியாபட்டி, 

திருச்சுழி தாலுகா பி.தொட்டியங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் பாண்டியம்மாள் (வயது 43). இவருக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளை தனது வீட்டின் முன்பு நிறுத்திவிட்டு இரவு தூங்க சென்றார். நள்ளிரவில் வீட்டிற்கு வெளியே ஏதோ சத்தம் கேட்டது. இதையடுத்து அவர் வந்து பார்த்த போது அவரது மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. இதுகுறித்து பாண்டியம்மாள் முன்விரோதம் காரணமாக மோட்டார் சைக்கிளுக்கு சிலர் தீ வைத்ததாக அளித்த புகாரின் பேரில் திருச்சுழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்