சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாயின் 2-வது கணவர் போக்சோவில் கைது

கோவையில் 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாயின் 2-வது கணவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-11-26 18:45 GMT


கோவையில் 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாயின் 2-வது கணவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

சிறுமிக்கு பாலியல் தொல்லை

கோவை குனியமுத்துரை சேர்ந்த 40 வயது பெண் ஒரு கல்லூரியில் பேராசிரியையாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி 17 வயதில் ஒரு மகளும், 16 வயதில் ஒரு மகளும் உள்ளனர். 10 ஆண்டுகளுக்கு முன்பு பேராசிரியையின் கணவர் வாகன விபத்தில் பலியானார். இதையடுத்து அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆன 47 வயதுடைய, மருந்து விற்பனை பிரதிநிதி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் 2 பேரும் கடந்த 2014-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து மருந்து விற்பனை பிரதிநிதி 2 மனைவிகளுடன் வாழ்ந்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் தனியாக இருந்த பேராசிரியையின் 2-வது மகளுக்கு மருந்து விற்பனை பிரதிநிதி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து அவர் தனது தாயிடம் கூறி கதறி அழுதுள்ளார். இதுதொடர்பாக பேராசிரியை மேற்கு அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.

போக்சோவில் கைது

புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் தெய்வமணி விசாரணை நடத்தி பேராசிரியையின் 2-வது கணவரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதற்கிடையில், கல்லூரி பேராசிரியை அனைத்து மகளிர் போலீசில் மேலும் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் மருந்து விற்பனை பிரதிநிதி வெவ்வேறு கால கட்டங்களில் தன்னிடம் ரூ.20 லட்சம் பெற்று மோசடி செய்து விட்டதாக புகார் அளித்தார். இந்த புகாரின் பேரிலும் போலீசார் மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்