கலெக்டர் அலுவலகத்தில் 2 மகன்களுடன் தாய் திடீர் தர்ணா

சாதிச்சான்றிதழ் கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் 2 மகன்களுடன் தாய் திடீர் தர்ணா

Update: 2022-09-16 18:45 GMT

விழுப்புரம்

விழுப்புரம் அருகே உள்ள பனங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் மனோகர். இவரது மகன்களான அகஸ்டின்மனோ (வயது 15), ஆகாஷ் (7) ஆகியோர் அரசு பள்ளியில் படித்து வருகின்றனர். இவர்களுக்கு சாதிச்சான்றிதழ் கேட்டு தாசில்தாரிடம் மனு அளித்தார். ஆனால் இதுநாள் வரையிலும் சாதிச்சான்றிதழ் வழங்கப்படவில்லை. இந்நிலையில் நேற்று காலை மனோகரின் மனைவி சித்ரா, தனது மகன்களுடன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து அங்குள்ள நுழைவுவாயில் முன்பு திடீரென அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது தனது மகன்கள் இருவருக்கும் சாதிச்சான்றிதழ் வழங்கக்கோரி கோஷமிட்டார். உடனே அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் விரைந்து சென்று சித்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு சென்று சாதிச்சான்றிதழ் கிடைக்க விரைவில் நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர். அதன் பிறகு சித்ரா, தனது போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து சென்றார்.

Tags:    

மேலும் செய்திகள்