மதர்தெரசா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி

மதர்தெரசா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்றனர்.

Update: 2023-05-23 17:31 GMT

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூரில் உள்ள மதர்தெரசா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தொடர்ந்து 14 ஆண்டுகளாக எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 பொதுத்தேர்வுகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது. 12-ம் வகுப்பில் 600-க்கு 571 மதிப்பெண் பெற்று சாதனைப்படைத்துள்ளது. குறிப்பிடத்தக்க வகையில் 12-ம் வகுப்பில் முகமது ஆதில் என்ற மாணவன் கணினி, வணிகவியல், பயன்பாடுகள் பாடத்தில் 100-க்கு 100-மதிப்பெண் பெற்றும் தீக்ஷா என்ற மாணவி வணிகவியல் பாடத்தில் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றும் பள்ளிக்கும் பெற்றோருக்கும் பெருமை சேர்த்துள்ளனர். மேலும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவன் ஸ்ரீனிவாசன், மாணவி ஸ்ரீநிதி, மாணவன் பிரவின் சிறப்பிடம் பெற்று பள்ளிக்கும் பெற்றோருக்கும் சிறப்பு சேர்த்துள்ளனர். சிறப்பிடம் பெற்ற மாணவர்களையும் 100 சதவீதம் தேர்ச்சிக்கு உழைத்த முதல்வர் மற்றும் ஆசிரியர்களையும் பள்ளியின் நிறுவனர் சின்னத்தம்பி, தாளாளர் உதயக்குமார் மற்றும் இயக்குனர் பூங்குன்றன் ஆகியோர் வாழ்த்துக்கள் கூறி கவுரவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்