தவறி விழுந்த தாய்-மகன் காயம்

பஸ்சில் இருந்து தவறி விழுந்த தாய்-மகன் காயம்

Update: 2023-03-09 18:45 GMT

விழுப்புரம்

திருவெண்ணெய்நல்லூர் தாலுகா தடுத்தாட்கொண்டூரை சேர்ந்தவர் ஜேசுதாஸ் மனைவி மெடில்டா (வயது 30). இவர் தனது மகன் ஜேசனுடன் (6) சென்னை- விருத்தாசலம் செல்லும் அரசு பஸ்சில் பயணம் செய்தார். இவர்கள் பஸ்சின் முன்பக்க படிக்கட்டின் நேராக உள்ள வலதுபக்க இருக்கையில் அமர்ந்திருந்தனர். விழுப்புரம் வழுதரெட்டி பகுதியில் செல்லும்போது பஸ் டிரைவர் திடீரென பிரேக் போட்டார். அப்போது மெடில்டாவும், ஜேசனும் நிலைதடுமாறி பஸ்சின் படிக்கட்டு வழியாக கீழே விழுந்தனர். இதில் காயமடைந்த இருவரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்த புகாரின்பேரில் விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்