5 பவுன் நகையை திருடிய தாய், மகள் கைது

5 பவுன் நகையை திருடிய தாய், மகள் கைது செய்யப்பட்டனர்

Update: 2022-12-12 20:24 GMT

மாட்டுத்தாவணி

மதுரை மாட்டுத்தாவணியில் புதிதாக ஜவுளிக்கடை திறக்கப்பட்டு உள்ளது. அதனால் கடையில் எப்போதும் கூட்டம் அதிகமாக இருக்கிறது. இங்கு நகை பிரிவில் ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பிலான 5 பவுன் நகையை 2 பெண்கள் திருடியதை ஊழியர்கள் கண்டு பிடித்தனர்.உடனே இது குறித்து மாட்டுத்தாவணி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ராஜாங்கம் தலைமையில் போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில் செக்கானூரணி பன்னியான் ரோடு சுமதி (வயது50), அவரது மகள் பிரியதர்ஷினி (28) என்பது தெரியவந்தது. இவர்கள் அதே கடையில் கவரிங் சங்கிலியை வாங்கி, நகைக்கடை பிரிவுக்கு வந்தனர். அங்கு அவர்கள் நகையை பார்வையிடுவதுபோல் நடித்து கவரிங் நகையை வைத்துவிட்டு அசல் தங்க நகையை திருடியது தெரியவந்தது. அதை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்