பிரசவத்துக்கு செல்லும் வழியில் தாயும், சிசுவும் சாவு
இளம்பிள்ளை அருகே பிரசவத்துக்கு செல்லும் வழியில் தாயும், சிசுவும் பரிதாபமாக இறந்தனர்.;
இளம்பிள்ளை:-
இளம்பிள்ளை அருகே தப்பகுட்டை கருப்பகவுண்டனூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார். தறி தொழிலாளி. இவருடைய மனைவி சவுடேஸ்வரி (வயது 26). இந்த தம்பதிக்கு 5 வயதில் நிவாஸ் என்ற மகன் உள்ளான். இதற்கிடையே சவுடேஸ்வரி மீண்டும் கர்ப்பம் ஆனார். நேற்று காலையில் அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இளம்பிள்ளை அரசு ஆஸ்பத்திரிக்கு சவுடேஸ்வரியை அழைத்து சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சவுடேஸ்வரியை அழைத்து வந்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், ஆஸ்பத்திரிக்கு வரும் வழியில் சவுடேஸ்வரியும், அவரது வயிற்றில் இருந்த சிசுவும் இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து மகுடஞ்சாவடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.