குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்; ஆண்களை விட பெண்கள் அதிகம்
குற்றாலம் அருவிகளில் தண்ணீர் அதிகமாக கொட்டி வரும் நிலையில் சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் நின்று குளித்து செல்கின்றனர்.
தென்காசி:
தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் கடந்த வாரம் பெய்த சாரல் மழையினால் அருவிகளில் தண்ணீர் அதிகமாக கொட்டியது. இதைத்தொடர்ந்து தினமும் சுற்றுலா பயணிகள் ஆயிரக்கணக்கானோர் குற்றாலத்திற்கு வந்து குளித்துச் செல்கிறார்கள்.
தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை என்பதாலும் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதாலும் குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் குவிந்தனர். குறிப்பாக ஆண்களை விட பெண்களின் கூட்டம் மிக அதிகமாக காணப்பட்டது.
இதில் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி ஆகியவற்றில் நீண்ட வரிசையில் சுற்றுலா பயணிகள் நின்று குளிப்பதற்கு போலீசார் ஏற்பாடு செய்திருந்தனர். ஆண்களும் பெண்களும் தனித்தனி வரிசையில் நின்று குளித்து சென்றனர்.