பள்ளி மீது மரக்கிளை விழுந்ததில் 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயம்

தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் பள்ளியின் மீது விழுந்த கிளையை வெட்டி அகற்றினர்.

Update: 2023-12-14 13:12 GMT

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த சிறுவனூர் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 50 மாணவர்கள் படித்து வருகின்றனர். பள்ளிக்கு வழக்கம் போல் வந்த மாணவர்கள், பள்ளியின் பழைய கட்டிடத்தில் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது எதிர்பாராத விதமாக, பள்ளியின் அருகே இருந்த பழமை வாய்ந்த அரச மரம் பள்ளியின் மீது விழுந்தது. இதில், சாப்பிட்டுக் கொண்டிருந்த மாணவ, மாணவிகளில் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயமடைந்த மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

மேலும் தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் பள்ளியின் மீது விழுந்த கிளையை வெட்டி அகற்றினர். மரத்தில் உள்ள மற்ற கிளைகளையும் வெட்டுவதற்கும் நடவடிக்கை மேற்கொண்டர்.

 

Tags:    

மேலும் செய்திகள்