சுவரில் மொபட் மோதி வாலிபர் பலி

சுவரில் மொபட் மோதி வாலிபர் பலி

Update: 2023-01-20 18:45 GMT

வால்பாறை

வால்பாறை அருகே பச்சைமலை எஸ்டேட் பகுதியை சேர்ந்தவர் மகேஷ்(வயது 21). இவர் ேநற்று முன்தினம் இரவில் தனது நண்பர்களான மணிகண்டன்(23), நந்தகுமார், அஸ்வின் ஆகியோருடன் ஒரே மொபட்டில் வால்பாறையில் இருந்து சிங்கோனா எஸ்டேட்டுக்கு சென்று கொண்டு இருந்தார். மொபட்டை மணிகண்டன் ஓட்டி சென்றார்.

சிறுகுன்றா எஸ்டேட் மாட்டுப்பட்டி அருகே சென்றபோது, திடீரென அவரது கட்டுப்பாட்டை இழந்த மொபட், சாலையோர சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் மொபட்டில் சென்ற 4 பேரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தனர். அவர்களை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு வால்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி மகேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 3 பேருக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து வால்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்து, கவன குறைவாக வாகனம் ஓட்டிய மணிகண்டன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்