மூவேந்தர் மருதம் முன்னேற்றகழகத்தினர் ஆர்ப்பாட்டம்
கோவில்பட்டி உதவிகலெக்டர் அலுவலகம் முன்பு மூவேந்தர் மருதம் முன்னேற்ற கழகத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று மூவேந்தர் மருதம் முன்னேற்றக் கழகத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினா். ஆர்ப்பாட்டத்திற்கு மாநில தலைவர் அன்புராஜ் தலைமை தாங்கினார். இ.எஸ்.ஐ. மருந்தகத்துக்கு செல்லும் நோயாளிகளை மரியாதை குறைவாக நடத்தும் டாக்டர், செவிலியர் மீது நடவடிக்கை எடுக்ககோரி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மாநில செயலாளர் பொன்னுச்சாமி, மாநில கொள்கை பரப்புச் செயலாளர் முனியசாமி, மாவட்ட செயலாளர் பேச்சிமுத்து, ஒன்றிய செயலாளர் பொன்மாடசாமி, நகர செயலாளர் செல்லத்துரை, மாவட்ட இணை செயலாளர் செல்வேந்திரகுமார் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.