மாதாந்திர பராமரிப்பு பணி: கரூர், மாயனூர் பகுதிகளில் இன்று மின் நிறுத்தம்

மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக கரூர், மாயனூர் பகுதிகளில் இன்று மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

Update: 2023-05-11 19:06 GMT

மின்சாரம் நிறுத்தம்

கரூர் துணைமின் நிலையத்தில் இருந்து செல்லும் ஜவகர்பஜார் பீடரில் சுபாஷ் சந்திரபோஸ் சிலை அருகில் மேம்பாட்டு பணிகள் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது.

எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும் கரூர் ஆசாத் ரோடு, காமராஜ் ரோடு, சுபாஷ் சந்திரபோஸ் சிலை ஆகிய பகுதிகளில் இன்று காலை 9.30 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது.

புகழூர்

கரூர் மாவட்டம், புகழூர் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும் புன்செய் புகழூர், வேலாயுதம்பாளையம், தோட்டக்குறிச்சி, தளவாபாளையம், தவுட்டுப்பாளையம், நடையனூர், சேமங்கி, நாணப்பரப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது.

ஒத்தக்கடை

கரூர் ஒத்தக்கடை துணைமின் நிலையத்தில் தரம் உயர்த்துவதற்கு மேம்பாட்டு பணிகள் இன்று நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும ஒத்தக்கடை, சோமூர், நெரூர், அக்ரஹாரம், நெரூர் வடபாகம், நெரூர் தென்பாகம், மரவாப்பாளையம், கோயம்பள்ளி, முனியப்பனூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது.

மாயனூர்

மாயனூர் துணைமின் நிலையத்தில் கட்டளை, மணவாசி, காட்டுப்புத்தூர் மின்பாதையில் மேம்பாட்டு பணிகள் இன்று நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும் ரெங்கநாதபுரம், கட்டளை, மேலமாயனூர், மாயனூர், சந்தபேட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது.

மேற்கண்ட தகவல்களை கரூர் மாவட்ட மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்