கோவை உக்கடம் பகுதியில் அல் அமீன் காலனி உள்ளது. இங்கு குரங்குகள் தொல்லை அதிகரித்து வருகிறது. நேற்று காலை அப்பகுதியில் சுற்றித்திரிந்த குரங்குகள், ஒரு வீட்டில் இருந்து மற்றொரு வீட்டிற்கு தாவி, தாவி சென்றன. மேலும் ஜன்னல் வழியாக வீடுகளுக்குள் நுழைய முயன்றன. உடனே பொதுமக்கள் தங்களது வீடுகளின் ஜன்னல் கதவுகளை மூடினர்.
இதற்கிடையில் அங்கு விளையாடும் குழந்தைகளை குரங்குகள் துரத்த முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அவை மின்கம்பங்கள் மீது ஏறுவதால், மின் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர். மேலும் அட்டகாசம் செய்யும் குரங்குகளை பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட வேண்டும் என்று வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.