சேட்டை செய்த குரங்கு வலையில் சிக்கியது

சேட்டை செய்த குரங்கு வலையில் சிக்கியது

Update: 2022-10-13 13:14 GMT

அவினாசி

அவினாசி அருகே புதுப்பாளையம் கிராமம் சாமந்தங்கோட்டை பகுதியில் ஆண் குரங்கு ஒன்று வீடுகளுக்குள் புகுந்து அங்குள்ள தின்பண்டங்களை எடுத்து சென்றது. ரோட்டில் நடந்து செல்லும் பொதுமக்களிடம் சேட்டை செய்தது. மேலும் தனியாக செல்லும் சிறுவர், சிறுமிகளை பயமுறுத்தி, அவர்கள் கொண்டு செல்லும் பொருட்களை பறித்து இடையூறு ஏற்படுத்தியது. எனவே அந்த ரவுடி குரங்கை பிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து வனச்சரக அலுவலர் சுரேஷ் கிருஷ்ணன் அறிவுறுத்தலின்படி வனக்காப்பாளர் கணபதி செல்வம் மற்றும் மான் காவலர் மணிகண்டன் ஆகியோர் நேற்று சாமந்தங்கோட்டைக்கு வந்தனர். பின்னர் குரங்கு இருக்கும் இடத்தை கண்டறிந்தனர். இதையடுத்து பழங்கள், திண்பண்டங்கள் ஆகியவற்றை குரங்கு பார்க்குமாறு ஒரு வீட்டிற்குள் வைத்துவிட்டு மறைந்து கன்காணித்தனர். சிறிது நேரத்தில் அந்த குரங்கு திண்பண்டங்கள் இருக்கும் வீட்டிற்குள் சென்றதும் வனக்காப்பாளர்கள் விரைந்து சென்று தயாராக வைத்திருந்த வலையை வீசி குரங்கை பிடித்தனர். பின்னர் அந்த குரங்கை சின்னாறு வனப்பகுதியில் கொண்டு விட்டனர். குரங்கை பிடித்தற்கு பொதுமக்கள் பாராட்டுக்களை தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்