கண்காணிப்பு குழு கூட்டம் கார்த்தி சிதம்பரம் எம்.பி. தலைமையில் நடந்தது
கண்காணிப்பு குழு கூட்டம் கார்த்தி சிதம்பரம் எம்.பி. தலைமையில் நடந்தது.
சிவகங்கை மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்கூட்டம் கண்காணிப்பு குழு தலைவர் கார்த்தி சிதம்பரம் எம்.பி. தலைமையில் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத், காரைக்குடி எம்.எல்.ஏ. மாங்குடி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் சார்பில் மத்திய, மாநில அரசின் துறைகள் ரீதியாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், அதன் பயன்கள், நிதிநிலை, செலவினங்கள் ஆகியன குறித்தும், நடைபெற்று வரும் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கை குறித்தும் கார்த்தி சிதம்பரம் ஆய்வு செய்தார். மேலும். துறை சார்ந்த அலுவலர்கள், துறைகள் ரீதியாக மேற்கொண்ட பணிகள் தொடர்பாக ஆண்டறிக்கைபடி விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சிவராமன், செயற்பொறியாளர் வெண்ணிலா, அனைத்து ஊராட்சி ஒன்றிய தலைவர்கள், நகராட்சி ஆணையாளர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.