தொழிலாளியிடம் பணம் கேட்டு மிரட்டியவர் கைது

தூத்துக்குடியில் தொழிலாளியிடம் பணம் கேட்டு மிரட்டியவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-09-21 18:45 GMT

தூத்துக்குடி மத்தியபாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அய்யப்பன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, அண்ணாநகர் மெயின் ரோட்டில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டு இருந்தவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவர் தூத்துக்குடி டூவிபுரத்தை சேர்ந்த பரமசிவம் மகன் காளிராஜ் என்ற கட்டைகாளி (வயது 38) என்பதும், அவர் அந்த பகுதியில் வந்த தொழிலாளி ஒருவரை வழிமறித்து பணம் கேட்டு தகராறு செய்து கத்தியால் குத்தி கொலை முயற்சியில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. உடனடியாக மத்தியபாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து காளிராஜை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்