கலெக்டர் அலுவலகம் அருகே நிறுத்தப்பட்டிருந்த லாரியில் பணம் திருடியவர் கைது

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் அருகே நிறுத்தப்பட்டிருந்த லாரியில் பணம் திருடியவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-05-30 16:00 GMT

நாமக்கல் மாவட்டம் தேவராயபுரத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 41). லாரி டிரைவர். கடந்த 26-ந்தேதி இவர், மதுரையில் உள்ள ஒரு நிறுவனத்துக்கு லாரியில் பருத்திக்கொட்டையை இறக்கி விட்டு வாடகையாக ரூ.61 ஆயிரம் பெற்றார். அந்த பணத்தை லாரியில் உள்ள ஒரு பெட்டியில் வைத்து பூட்டினார். பின்னர் அவர், நாமக்கல் நோக்கி லாரியில் சென்று கொண்டிருந்தார்.

இந்தநிலையில் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள ஒரு ஓட்டல் முன்பு லாரியை நிறுத்தி விட்டு இரவு உணவு சாப்பிட்டார். அதன்பிறகு லாரியை எடுக்க முயன்றபோது, பணம் வைத்திருந்த பெட்டி உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதில் இருந்த ரூ.61 ஆயிரமும் திருடப்பட்டிருந்தது. இதுகுறித்து தாடிக்கொம்பு போலீஸ் நிலையத்தில் சுப்பிரமணியன் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், வேடசந்தூர் அருகே உள்ள மாத்தினிபட்டியை சேர்ந்த முருகானந்தம் (57) லாரியில் பணம் திருடியது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்