ஓய்வு பெற்ற தனியார் ஊழியரிடம் ரூ.6.32 லட்சம் அபேஸ்

வங்கி கணக்கில் பான்கார்டை இணைக்க வேண்டும் என கூறி ஓய்வு பெற்ற தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.6.32 லட்சம் அபேஸ் செய்தது குறித்து கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-11-26 18:45 GMT

வங்கி கணக்கில் பான்கார்டை இணைக்க வேண்டும் என கூறி ஓய்வு பெற்ற தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.6.32 லட்சம் அபேஸ் செய்தது குறித்து கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஓய்வு பெற்ற ஊழியர்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், மத்திகிரி டைட்டன் டவுன்ஷிப் ரோடு பகுதியை சேர்ந்தவர் ராஜகோபாலன் (வயது 61). ஓய்வு பெற்ற தனியார் நிறுவன ஊழியர். இவரது செல்போன் எண்ணுக்கு கடந்த 23-ந் தேதி ஒரு போன் வந்துள்ளது. அதில் பேசியவர், தான் வங்கி மேலாளர் எனவும் 'உங்களது வங்கி கணக்கில் இன்னும் பான் கார்டு நம்பரை இணைக்காமல் இருக்கிறீர்கள். அதை உடனடியாக இணைக்க வேண்டும்.

இதனால் தற்போது அனுப்பப்படும் இணையதள லிங்கில் அனைத்தையும் பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும் கூறி உள்ளார். இதை நம்பிய ராஜகோபாலன், அந்த நபர் அனுப்பி இணையதள லிங்கில் தனது வங்கி விவரங்கள் மற்றும் கிரெடிட் கார்டு எண்களை பதிவேற்றம் செய்துள்ளார். இதையடுத்து சில நிமிடங்களில் ராஜகோபாலன் வங்கி கணக்கில் இருந்து ரூ.6 லட்சத்து 32 ஆயிரத்து 665 எடுக்கப்பட்டது.

போலீசார் விசாரணை

இதனால் அதிர்ச்சியடைந்த அவர், தனக்கு போன் செய்த மொபைல் எண்ணை தொடர்பு கொண்டார். ஆனால் அந்த எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. பணம் அபேஸ் செய்யப்பட்டது குறித்து ராஜகோபாலன் கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஓய்வு பெற்ற தனியார் நிறுவன ஊழியரிடம் பணம் அபேஸ் செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்