ஜவுளிக்கடையில் பணம், நகை திருட்டு
நாட்டறம்பள்ளி அருகே ஜவுளிக்கடையில் பணம், நகை திருட்டு போனது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜோலார்பேட்டை
நாட்டறம்பள்ளி பூபதி தெருவைச் சேர்ந்தவர் திருப்பதி (வயது 50). இவர், நாட்டறம்பள்ளி பஸ் நிலையம் அருகில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். 14-ந் தேதி இரவு வியாபாரம் முடிந்ததும் வழக்கம்போல் கடையை சாத்தி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.
அடுத்தநாள் காலை ஜவுளிக்கடையை திறந்து பார்த்தபோது, பணப்பெட்டியில் வைத்திருந்த ரூ.20 ஆயிரம், 2 பவுன் நகையை காணவில்லை. யாரோ திருடிச் சென்று விட்டனர்.
இதுகுறித்து ஜவுளிக்கடை உரிமையாளர் திருப்பதி நாட்டறம்பள்ளி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஜவுளிக்கடைக்கு சென்று விசாரணை செய்தனர். அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் பரிசீலனை செய்து வருகின்றனர்.