சாப்ட்வேர் என்ஜினீயரிடம் ரூ.20.31 லட்சம் மோசடி
ஆன்லைனில் குறைந்த முதலீடு செய்து அதிக லாபம் கிடைக்கும் என கூறி சாப்ட்வேர் என்ஜினீயரிடம் ரூ.20.31 லட்சம் மோசடி செய்தது தொடர்பாக கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆன்லைனில் குறைந்த முதலீடு செய்து ஆன்லைனில் குறைந்த முதலீடு செய்துஅதிக லாபம் கிடைக்கும் என கூறி சாப்ட்வேர் என்ஜினீயரிடம் ரூ.20.31 லட்சம் மோசடி செய்தது தொடர்பாக கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சாப்ட்வேர் என்ஜினீயர்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஜனகபுரி லேஅவுட்டை சேர்ந்தவர் குமரேசன் (வயது 42). பி.இ. எம்.பி.ஏ. பட்டதாரி. பெங்களூருவில் உள்ள ஒரு நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 11-ந் தேதி இவரது செல்போனில் உள்ள டெலிகிராம் ஆப்பிற்கு ஒரு குறுந்தகவல் (மெசேஜ்) வந்தது.
அதில் ஆன்லைனில் குறைந்த முதலீடு செய்து அதிக லாபம் பெறலாம் என குறிப்பிடப்பட்டு இருந்தது. அதை நம்பிய குமரேசன் அதில் குறிப்பிட்டிருந்த 4 வங்கி கணக்குகளுக்கு ரூ.20 லட்சத்து 31 ஆயிரத்து 874 தொகையை அனுப்பினார். தொடர்ந்து அதில் குறிப்பிட்டு இருந்த செல்போன் எண்ணை அவர் தொடர்பு கொண்டார்.
பணம் மோசடி
அப்போது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த குமரேசன், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார். இந்த பணம் மோசடி குறித்து அவர் கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் காந்திமதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.