பணம் பறித்தவர் கைது

தொழிலாளியிடம் கத்திமுனையில் பணம் பறித்தவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-04-11 21:27 GMT

தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரை சேர்ந்தவர் இசக்கி (வயது 30). தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் வி.எம்.சத்திரம் அருகே நான்குவழி சாலையில் சீனிவாசநகர் பகுதியில் வந்து கொண்டு இருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த தூத்துக்குடியை சேர்ந்த தங்ககுமார் (22) என்பவர் இசக்கியிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.210-ஐ பறித்து சென்றுள்ளார். இதுகுறித்து இசக்கி நெல்லை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்ககுமாரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்