பள்ளி மாணவிகளிடம் சில்மிஷம்; ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது

சங்கரன்கோவிலில், தனியார் பள்ளியில் மாணவிகளிடம் சில்மிஷம் செய்த ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். விசாரணை நடத்திய பெண் அதிகாரி அளித்த புகாரின்பேரில் போலீசார் இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்தனர்.

Update: 2023-01-05 18:45 GMT

சங்கரன்கோவில்:

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியைச் சேர்ந்த ஒரு தனியார் பள்ளியில் படிக்கும் மாணவிகளிடம் அதே பள்ளியை சேர்ந்த ஒரு ஆசிரியர் சில்மிஷத்தில் ஈடுபடுவதாக மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் கவிதாவுக்கு புகார் வந்தது. இதனைத்தொடர்ந்து அந்த பள்ளிக்கு குழந்தைகள் நல அலுவலர் கவிதா சென்றார். அங்கு படிக்கும் மாணவிகளிடம் அவர் விசாரணை நடத்தினார்.விசாரணையில், அந்த தனியார் பள்ளியை சேர்ந்த ஆசிரியர் ரகு (வயது 37) என்பவர் பள்ளி மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.

இது தொடர்பாக கவிதா சங்கரன்கோவில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், சங்கரன்கோவில் துணை போலீஸ் சூப்பிரண்டு சுதீர் வழக்குப்பதிவு செய்தார். இதைத்தொடர்ந்து பள்ளி ஆசிரியர் ரகுவை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். பாடம் சொல்லிக்கொடுக்க வேண்டிய ஆசிரியரே பள்ளி மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டு கைதான சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்