மோகனூர்
மோகனூரில் வட்ட அளவிலான பள்ளி மாணவிகளுக்கான தடகள விளையாட்டு போட்டி என்.புதுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. போட்டியில் வட்ட அளவில் 30-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்றனர். அதில் மோகனூர் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்தனர்.
இதில் 14 வயதுக்கு உட்பட்ட பிரிவில் மாணவிகள் இலக்கியா ஓட்ட போட்டி, நீளம் தாண்டுதல், 17 வயதுக்கு உட்பட்ட பிரிவில் விஜிதா தடை தாண்டும் போட்டி, குதித்து எட்டி தாண்டும் போட்டியில், ஸ்ரீசிவநிதி ஓட்டம், நீளம் தாண்டும் போட்டியில் முதலிடம் பிடித்தனர். 19 வயதுக்கு உட்பட்ட பிரிவில் கிருபாசாலினி ஓட்டம், நீளம் தாண்டுதல், தடை தாண்டும் போட்டி மற்றும் ஷாசினி ஓட்டத்தில் முதலிடம் பிடித்தனர். மேலும் 14 வயதுக்கு உட்பட்ட பிரிவில் தாராகுமாரி ஓட்ட போட்டி, கலையரசி குண்டு எறிதல், ஸ்ரீஷா ஓட்ட போட்டி, கார்த்திகா ஓட்ட போட்டி, சந்தியா தட்டு மற்றும் குண்டு எறியும் போட்டிகளில் முதலிடம் பிடித்தனர். அதேபோல் 17 மற்றும் 19 வயதுக்கு உட்பட்ட பிரிவில் ரித்திகா, காவியாஸ்ரீ ஓட்ட போட்டிகளில் முதலிடம் பிடித்தனர்.
வட்ட அளவிலான தடகள விளையாட்டு போட்டிகளில், இப்பள்ளி தொடர்ந்து 6-வது முறையாக ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் பெற்று சாதனை படைத்துள்ளது. வெற்றி பெற்ற மாணவிகளை தமிழாசிரியர் ராகவன், கம்ப்யூட்டர் ஆசிரியர் பிரபாகரன், உடற்கல்வி ஆசிரியர்கள் தீபக், ராதிகா, ஜீவா ஆகியோரையும், பள்ளி தலைமையாசிரியர் சுடரொளி, ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகம், பள்ளி மேலாண்மை குழுவினர் பாராட்டினர்.