அரசு பள்ளியில் முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ. ஆய்வு

அரசு பள்ளியில் முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.

Update: 2022-12-02 18:45 GMT

திட்டச்சேரி:

திட்டச்சேரி அரசு மேல்நிலைப்பள்ளியில் முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ. பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது இதுவரை பழுதடைந்த 8 வகுப்பறை கட்டிடங்கள் இடிக்கப்பட்டுள்ளதால் பள்ளியில் மாணவர்கள் அமர்ந்து படிக்க இட நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும், ஆய்வக கட்டிடம் இல்லாமல் மாணவர்கள் சிரமப்படுவதாகவும் பள்ளியின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அப்போது வகுப்பறை மற்றும் ஆய்வக கட்டிடம் கட்டுவதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் எம்.எல்.ஏ. உறுதி அளித்தார். மேலும் அங்கு நடைபெற்று வரும் நீட் பயிற்சி மையத்தில் பயிலும் மாணவர்களுடன் அவர் கலந்துரையாடினார். .இந்த ஆய்வின் போது திட்டச்சேரி பேரூராட்சி உறுப்பினர்கள் முகமது சுல்தான், செய்யது ரியாசுதீன், ரித்தாவுதீன், வி.சி.க. ஒன்றிய செயலாளர் சக்திவேல் ஆகியார் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்