நவீன நிழற்குடைகள் சுத்தம் செய்யும் பணி

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் நவீன நிழற்குடைகள் சுத்தம் செய்யும் பணி நடந்தது.

Update: 2022-10-13 16:29 GMT

திருவண்ணாமலை கிரிவலப்பாதை 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்டதாகும். இதில் பக்தர்கள் நடந்து செல்லும் நடைபாதையில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் நவீன நிழற்குடைகள் அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத்திருவிழா வருகிற 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

இதனால் தீபத் திருவிழாவிற்கான முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகிறது.

அதனைத்தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறை சார்பில் கிரிவலப்பாதையில் உள்ள நவீன நிழற்குடைகள் சுத்தம் செய்யும் பணி இன்று நடைபெற்றது.

தீபத்திருவிழாவை முன்னிட்டு சுத்தம் செய்யும் பணி நடைபெறுவதாக பணியாளர்கள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்