நட்சத்திர ஏரியை சுத்தப்படுத்த நவீன எந்திரம்

நட்சத்திர ஏரியை சுத்தப்படுத்த நவீன எந்திரம்

Update: 2023-01-18 19:00 GMT


கொடைக்கானல் நகரில் உள்ள நட்சத்திர ஏரியில் களைசெடிகள் அதிக அளவில் வளர்ந்து வருகின்றன. இதனை அகற்றுவதில் நகராட்சி தூய்மை பணியாளர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் அதிக அளவில் அவை வளர்ந்துகொண்டே இருக்கிறது. இதையடுத்து களைசெடிகளை நவீன எந்திரத்தை பயன்படுத்தி முழுமையாக அகற்ற நகராட்சி தலைவர் செல்லத்துரை, துணை தலைவர் மாயக்கண்ணன் ஆகியோர் முடிவு செய்தனர். மேலும் இதற்காக ரூ.40 லட்சத்தில் நவீன எந்திரத்தையும் வாங்கி நேற்று கொடைக்கானலுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுத்தனர். இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ஏரியை தூய்மைப்படுத்த நவீன எந்திரம் வாங்கப்பட்டுள்ளது. விரைவில் அந்த எந்திரம் மூலம் நட்சத்திர ஏரியில் உள்ள களைச்செடிகள் முழுமையாக அகற்றப்படும் என்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்