குலசேகரம்,
குமரி மாவட்டத்தில் பல இடங்களில் கடந்த இரண்டு நாட்களாக பகலில் கடும் வெயிலும் பிற்பகலில் இடியுடன் மழையும் பெய்து வருகிறது. குறிப்பாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு உள்ளிட்ட அணைப் பகுதிகளிலும், மலையோரப் பகுதிகளான கடையாலுமூடு, களியல், திற்பரப்பு, குலசேகரம், திருநந்திக்கரை, பொன்மனை, சுருளகோடு உள்ளிட்ட இடங்களிலும் மிதமான மழை பெய்து வருகிறது. மழையால் அந்தப்பகுதிகளில் வெப்பம் தணிந்துள்ளது.
மழை தொடர்ந்து பெய்து வருவதால், மலையோரப் பகுதிகளில் வாழை, அன்னாசி, மரவள்ளி, ரப்பர் உள்ளிட்டவை பயிரிட்ட விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.