கிச்சிப்பாளையத்தில் நகைக்கடை ஊழியரிடம் செல்போன் பறிப்பு

கிச்சிப்பாளையத்தில் நகைக்கடை ஊழியரிடம் செல்போன் பறிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Update: 2023-02-26 18:45 GMT

சேலம் கிச்சிப்பாளையம் அசோக் நகரை சேர்ந்தவர் செந்தில் (வயது 37). இவர் சேலம் டவுனில் உள்ள ஒரு நகைக்கடையில் வேலை செய்து வருகிறார். இவர் வழக்கம்போல் நகைக்கடையில் வேலையை முடித்து கொண்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது கிச்சிப்பாளையம் குறிஞ்சிநகர் பகுதியில் சென்றபோது பின்னால் மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் செந்திலை வழிமறித்து மிரட்டி அவரிடம் இருந்த செல்போனை பறித்துக்கொண்டு தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து அவர் கிச்சிப்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்போனை பறித்து சென்றவர்கள் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்கள்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மேலும் செய்திகள்