நடிகர் விஜய் ஆண்டனியின் மகள் மறைவுக்கு ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் இரங்கல்

நடிகர் விஜய் ஆண்டனியின் மகள் மறைவுக்கு நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Update: 2023-09-19 17:10 GMT

சென்னை,

இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி தன் குடும்பத்துடன் சென்னை, டி.டி.கே சாலையில் வசித்து வருகிறார். இவருடைய மகள் மீரா. பிளஸ் 2 படித்து வந்த இவர் கடந்த ஒரு வருடமாக மன அழுத்தத்திற்காக சிகிச்சை எடுத்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த சூழலில் மீரா இன்று அதிகாலை 3 மணியளவில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுதொடர்பாக தேனாம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விஜய் ஆண்டனியின் மகள் இறப்பு பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் கொடுத்துள்ள நிலையில், ரசிகர்களும் திரையுலக பிரபலங்களும் நேரிலும், சமூக வலைதளங்கள் வாயிலாகவும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், நடிகர் விஜய் ஆண்டனியின் மகள் மறைவுக்கு நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், "தம்பி விஜய் ஆண்டனி மகளின் மரணச் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. மீராவை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார்.


Tags:    

மேலும் செய்திகள்