சாலை பணிகளை எம்.எல்.ஏ. ஆய்வு

சாலை பணிகளை மானாமதுரை எம்.எல்.ஏ. தமிழரசி ஆய்வு செய்தார்.

Update: 2022-08-30 17:51 GMT

மானாமதுரை,

மானாமதுரை அருகே கல்குறிச்சி கிராமத்திற்கு செல்லும் சாலை குண்டும், குழியுமாக இருந்தது. இதனால் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அவதியடைந்தனர். அவ்வப்போது விபத்துகள் ஏற்பட்டு வந்தது. இந்த சாலையை சீரமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து ரூ.1 கோடியே 75 லட்சம் மதிப்பில் கிராமத்திற்கு சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்த சாலை பணிகளை மானாமதுரை எம்.எல்.ஏ. தமிழரசி ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் பாக்கியலட்சுமி, யூனியன் துணை சேர்மன் முத்துச்சாமி, ஒன்றிய செயலாளர் ராஜாமணி, ஒன்றிய கவுன்சிலர் ராதா சிவச்சந்திரன், மாவட்ட பிரதிநிதி காளியப்பன், கிழக்கு ஒன்றிய நெசவாளர் அணி அமைப்பாளர் பால்பாண்டியன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சடையப்பன் ஆகியோர் உடனிருந்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்