எம்.எல்.ஏ. அலுவலகத்தில் இ-சேவை மையம் திறப்பு விழா
நெல்லை எம்.எல்.ஏ. அலுவலகத்தில் இ-சேவை மையம் திறப்பு விழா நடந்தது.
நெல்லை மாநகராட்சி அலுவலகம் எதிரே உள்ள நெல்லை தொகுதி சட்டமன்ற அலுவலகத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் இ-சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது.
நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்துவைத்தார்.
இதில் பா.ஜனதா மாவட்ட பொது செயலாளர் முத்துபலவேசம், முன்னாள் கனிமம் இயற்கை வளம் சார்ந்த பிரிவு மாநில தலைவர் பொற்கைபாண்டியன், மானூர் தெற்கு ஒன்றிய தலைவர் அங்குராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து அங்கு வந்த மாற்றுத்திறனாளிகளிடம் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ., கோரிக்கை மனுக்களை பெற்று நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.