எம்.எல்.ஏ. அலுவலகம் எதிரே உள்ள பேக்கரி கடையின் பூட்டை உடைத்து ரூ.1 லட்சம், லேப்டாப் திருட்டு - மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

திருவள்ளூர் அருகே எம்.எல்.ஏ. அலுவலகம் எதிரே உள்ள பேக்கரி கடையின் பூட்டை உடைத்து ரூ.1 லட்சம், லேப்டாப் திருடிய மர்மநபர்களை தேடி வருகின்றனர்.;

Update:2022-06-26 11:57 IST

திருவள்ளூர் பெரியகுப்பம் கம்பர் தெருவை சேர்ந்தவர் சிங்காரவேலு (வயது 35). இவர் திருவள்ளூர் ஆயில் மில் பகுதியில் உள்ள எம்.எல்.ஏ. அலுவலகம் எதிரே பேக்கரி கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் அவர் பேக்கரி கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார்.

அதன் பின்னர், நேற்று காலை வழக்கம்போல கடையைத் திறக்க வந்தபோது, பேக்கரியின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், உள்ளே சென்று பார்த்தபோது கல்லாபெட்டி உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.1 லட்சமும், டி.வி. மற்றும் லேப்டாப் திருட்டு போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து அவர் திருவள்ளூர் டவுன் போலீசில் புகார் செய்தார்.

அதேபோல திருவள்ளூர் பெரியகுப்பம் ரெயில்வே குடியிருப்பில் வசித்து வருபவர் நாகம்மாள் (70). இவரது மகன் ரெயில்வே ஊழியர் ஆவார். இவர் நேற்று முன்தினம் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றனர். அப்போது வீட்டின் பின்பக்க கதவின் பூட்டை உடைத்து உள்ளே வந்த நபர்கள் திருட முயன்றதாக தெரிகிறது. ஆனால் வீட்டில் இருந்த பொருட்கள் எதுவும் திருட்டு போகவில்லை. இந்த சம்பவம் குறித்து திருவள்ளூர் டவுன் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. மேற்கண்ட இரண்டு சம்பவங்கள் குறித்தும் திருவள்ளூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்