அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் எம்.எல்.ஏ. ஆய்வு

திட்டச்சேரியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் எம்.எல்.ஏ. ஆய்வு

Update: 2023-10-08 18:45 GMT

திட்டச்சேரி:

திட்டச்சேரியில் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு திறக்கப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெறும் சிகிச்சைகள் குறித்து முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார். அப்போது ஆரம்ப சுகாதார நிலையம் திறக்கப்பட்டு முதல் பிரசவமாக மேலவாஞ்சூர் மெயின் ரோடு பகுதியை சேர்ந்த சிவா என்பவரின் மனைவி ரோஷி (வயது 27) என்பவருக்கு பிறந்த ஆண் குழந்தையை பார்வையிட்டு அவருக்கு தமிழக அரசால் வழங்கப்படும் பரிசு பெட்டகத்தை வழங்கினார். மேலும் அந்த குழந்தைக்கு தருண் என்று பெயர் சூட்டினார். தொடர்ந்து திட்டச்சேரி பேரூராட்சிக்கு உட்பட்ட வெள்ளத்திடலில் இடிக்கப்பட்ட சமுதாயக்கூடத்திற்கு ரூ.25 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தும் கட்டுமான பணிகள் தொடங்கப்படாமல் இருப்பதை பார்வையிட்டு உடன் கட்டுமான பணிகளை தொடங்க நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளை அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது பேரூராட்சி மன்ற தலைவர் ஆயிஷாசித்திக்கா, வட்டார மருத்துவ அலுவலர் மணிசுந்தரம், பேரூராட்சி செயல் அலுவலர் வெங்கடேசன், பேரூராட்சி மன்ற உறுப்பினர் முகமது சுல்தான், பேரூராட்சி இளநிலை உதவியாளர் கோவிந்தராஜ், சுகாதார ஆய்வாளர் பரமநாதன் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்