ஆடி மாதம் தந்தை வீட்டுக்கு வந்த புதுப்பெண் மாயம்

வெம்பாக்கம் அருகே ஆடி மாதம் தந்தை வீட்டுக்கு வந்த புதுப்பெண் மாயமானார்.

Update: 2023-09-02 14:14 GMT

தூசி

வெம்பாக்கம் தாலுகா தூசியை அடுத்த அப்துல்லாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கூலி தொழிலாளி. இவரது மகள் (வயது 23) எம்.காம் படித்துள்ளார்.

இவருக்கும் காஞ்சீபுரம் மாவட்டம் மேட்டுக்குப்பத்தை சேர்ந்த வாலிபருக்கும் கடந்த 23.3.2023 அன்று திருமணம் நடந்தது.

இந்த நிலையில் ஆடி மாதத்தை முன்னிட்டு மகளை தனது வீட்டுக்கு தந்தை அழைத்து வந்துள்ளார். ஆடி மாதம் முடிந்து கணவர் வீட்டுக்கு மகளை அனுப்பி வைக்க தந்தை முடிவு செய்தார்.

அப்போது அவர், கணவர் வீட்டில் பிரச்சினை உள்ளதாகவும், அடிக்கடி தன் கணவர் விவாகரத்து செய்து விடுவேன் என்று மிரட்டுவதாகவும் கூறியுள்ளார்.

அதற்கு அவர் சமாதானம் செய்து வைக்கிறேன் என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில் இளம்பெண் யாரிடமும் கூறாமல் நேற்று வீட்டை விட்டு வெளியில் சென்று விட்டார். எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை.

இதுகுறித்து தூசி போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் குமார், சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு ஆகியோர் வழக்குப்பதிவு செய்து புதுப்பெண்ணை ேதடி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்