மினிவேன் ேமாதி வாலிபர் படுகாயம்
திருப்புவனம் அருகே மினிவேன் மோதி வாலிபர் படுகாயம் அடைந்தார்.
திருப்புவனம்,
மதுரை கடச்சனேந்தல் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன் (வயது 24). இவர் மோட்டார் சைக்கிள், கார் சர்வீஸ் சென்டரில் மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு சிவகங்கை சென்று ஒரு காரை சர்வீஸ் செய்து விட்டு தனது மோட்டார் சைக்கிளில் மதுரைக்கு திரும்பி வந்துள்ளார். அதே சமயம் மதுரையிலிருந்து சிவகங்கைக்கு மினிவேன் சென்றுள்ளது. மினி வேனை டிரைவர் அய்யாச்சாமி (52) என்பவர் ஓட்டி வந்துள்ளார். திருமாஞ்சோலை அருகே வந்த போது மினிவேன், மோட்டார்சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியுள்ளது. இதில் மெக்கானிக் கணேசன் பலத்த காயமடைந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து கணேசனின் மனைவி ஸ்வேதா, பூவந்தி போலீசில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பரமசிவம் மினி வேன் டிரைவர் அய்யாச்சாமி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.