கடலூரில் வேளாண்மைத்துறை அமைச்சு பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கடலூரில் வேளாண்மைத்துறை அமைச்சு பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Update: 2023-08-17 19:43 GMT

தோட்டக்கலைத்துறையில் அமைச்சு பணியாளர்களின் மாறுதல் மற்றும் நியமனங்களில் அரசு விதிமுறைகளின்படி சீரான நடைமுறையை பின்பற்ற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் நேற்று வேளாண்மைத்துறை அமைச்சு பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அந்த வகையில் கடலூர் மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வேளாண்மைத்துறை அமைச்சு பணியாளர்கள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் மாலதி தலைமை தாங்கினார். மாவட்ட இணை செயலாளர் வாசுதேவன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் பாபு வரவேற்றார். மாநில துணை தலைவர் வெங்கடேசன் கோரிக்கையை வலியுறுத்தி பேசினார். இதில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ஹரிகிருஷ்ணன், தமிழ்நாடு அரசு கூட்டுறவு துறை ஊழியர் சங்க மாநில துணை தலைவர் பாலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்