ெதாழிற்பூங்கா அமைக்க அமைச்சர்கள் ஆர்.காந்தி, டி.ஆர்.பி.ராஜா ஆய்வு

ராணிப்பேட்டை மாவட்டம், பனப்பாக்கத்தில் தொழிற்பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டு சுமார் 1,213 ஏக்கர் நிலம் கையகபடுத்தப்பட்டது.

Update: 2023-08-01 18:22 GMT

நெமிலி

பனப்பாக்கத்தில் தொழிற்பூங்கா அமைக்க கையகப்படுத்தப்பட்ட 1,213 ஏக்கர் நிலத்தை அமைச்சர்கள் ஆர்.காந்தி, டி.ஆர்.பி.ராஜா ஆகியோர் நேரில் ஆய்வு செய்து சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்கும் பணிகளை விரைவுபடுத்த உத்தரவிட்டனர்.

தொழிற்பூங்கா

ராணிப்பேட்டை மாவட்டம், பனப்பாக்கத்தில் தொழிற்பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டு சுமார் 1,213 ஏக்கர் நிலம் கையகபடுத்தப்பட்டது.

தொழிற்பூங்காவுக்கு தேவையான நிலம் நெடும்புலி, துறையூர், பெருவளையம், அகவலம் ஆகிய கிராமங்களிலிருந்து கையகபடுத்தபட்டது. இதில் சுமார் 300 ஏக்கர் நிலம் அரசு புறம்போக்கு ஆகும்.

இந்நிலையில் நேற்று தமிழக தொழில்முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வார்த்தகதுறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா மற்றும் தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி ஆகியோர் தொழிற்பூங்காவுக்காக கையகபடுத்தபட்ட நிலத்தை நேரில் ஆய்வு செய்தனர்.

சிறப்பு பொருளாதார மண்டலம்

மேலும் இந்த சிப்காட்டில் 201 ஏக்கரில் சிறப்பு பொருளாதார மண்டலம் உருவாக்கப்பட்டு அதில் 125 ஏக்கர் நிலபரப்பில் காலணி உற்பத்தி தொழிற்சாலைக்கு நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த பணிகளை விரைவுபடுத்த துறை அதிகாரிகளுக்கு அமைச்சர்கள் உத்தரவிட்டனர்.

ஆய்வின்போது தொழிற்பூங்கா மேலாண்மை இயக்குனர் சுந்தரவள்ளி, ஆற்காடு ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ., நெமிலி ஒன்றியக்குழு தலைவர் வடிவேலு, நெமிலி தாசில்தார் பாலசந்தர், மாவட்ட கவுன்சிலர் சுந்தரம்மாள், தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் பெருமாள், ரவீந்திரன், பனப்பாக்கம் பேரூராட்சி தலைவர் கவிதா, ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஆகாஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்