200 பேருக்கு நலத்திட்ட உதவிகள்

திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க. தொழிலாளர் அணி சார்பில் 200 பேருக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், கயல்விழி ஆகியோர் வழங்கினார்கள்.

Update: 2023-10-12 18:03 GMT

திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க. தொழிலாளர் அணி சார்பில் 200 பேருக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், கயல்விழி ஆகியோர் வழங்கினார்கள்.

நலத்திட்ட உதவிகள்

தி.மு.க. திருப்பூர் தெற்கு மாவட்ட தொழிலாளர் அணியின் சார்பில் பள்ளி மாணவர்கள் மற்றும் துப்புரவு தொழிலாளர்கள் உள்பட 200 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தாராபுரம் சிவரஞ்சனி மஹாலில் நடைபெற்றது. விழாவுக்கு தொழிலாளர் அணியின் மாநில செயலாளர் பி.டி.சி.செல்வராஜ் வரவேற்றார். விழாவிற்கு திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் இல.பத்மநாபன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் எஸ்.முருகானந்தம், நகராட்சி தலைவர் கு.பாப்பு கண்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் கே.எஸ்.தனசேகர் ஆகியோர் முன்னிலை வித்தனர்.

விழாவில் பள்ளி மாணவ -மாணவிகளுக்கு சீருடைகள் மற்றும் துப்புரவு தொழிலாளர்கள் உள்பட 200 பேர்களுக்கு நலத்திட்ட உதவிகளை செய்தி மற்றும் தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோர் வழங்கினார்கள்.

பிறகு அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கூறும்போது " தமிழ்நாடு முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பிறகு தமிழ் நாட்டில் மக்களுக்கு என்னற்ற திட்டங்களை வழங்கியுள்ளார். இதனை மனதில் கொண்டு மக்கள் தி.மு.க.வுக்கு நன்றி கடன் பட்டவராக இருக்க வேண்டும்" என்றார்.

கலந்து கொண்டவர்கள்

விழாவில் நகர அவைத்தலைவர் கதிரவன், நகர துணை செயலாளரும், மாவட்ட திட்ட குழு உறுப்பினர் வி.கமலக்கண்ணன், மாவட்ட தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் பவர் சேகர், நகராட்சி கவுன்சிலர்கள், மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகள், நகர நிர்வாகிகள் மற்றும் பேரூராட்சி, கிளை நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்