குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்களுடன் அமைச்சர் ஆலோசனை

குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்களுடன் அமைச்சர் ஆலோசனை நடத்தினார்.

Update: 2022-10-02 19:27 GMT

சாத்தூர், 

சாத்தூர் நகராட்சி பகுதிகளுக்கு தாமிரபரணி ஆற்றில் சீவலப்பேரி குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீரானது பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. போதுமான அளவு இல்லாததால் சாத்தூர் வைப்பாற்றில் இருந்து உறை கிணற்றின் மூலம் குடிநீரானது வழங்கப்பட்டு வருகிறது. வைப்பாற்றில் இருந்து வழங்கப்படும் குடிநீரானது கழிவு நீர் கலந்து துர்நாற்றத்துடன் வருவதை பொதுமக்கள் பயன்படுத்த முடியவில்லை. எனவே சீவலப்பேரியிலிருந்து கூடுதலாக தண்ணீர் கொண்டு வருவதற்கான வழிமுறைகள் குறித்து சாத்தூர் நகராட்சி அலுவலகம் மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்களுடன் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் ஆலோசனை நடத்தினார். அப்போது நகர்மன்ற தலைவர் குருசாமி, நகர்மன்ற உறுப்பினர்கள், தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் கடற்கரைராஜ், முருகேசன் ஆகியோர் உடனிருந்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்