தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இலச்சினையை வெளியிட்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் புதிய இலச்சினையை இன்று வெளியிட்டார்.;

Update:2024-06-15 15:20 IST

சென்னை,

திருப்பூர் மாவட்டத்தில் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் விழாவில்,இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் புதிய இலச்சினையை இன்று வெளியிட்டார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இலச்சினை வெளியிடப்பட்டு 30 ஆண்டுகள் பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில் தேசிய மற்றும் சர்வதேச அளவில் தமிழ்நாடு பல்வேறு விளையாட்டுகளில் பெரும் முன்னேற்றம் அடைந்து வருவதால், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் தனித்துவத்தை வெளிப்படுத்தவும் பல்வேறு விளையாட்டுப் பிரிவுகளை பிரிதிபலிக்கவும் தமிழ்நாட்டின் வரைபடத்தை உள்ளடக்கிய புதிய இலச்சினை வடிவமைக்கப்பட்டுள்ளது.

புதிய இலச்சினையில் இடம்பெற்றிருக்கும் மஞ்சள் நிறம் ஆற்றல் மற்றும் விளையாட்டு ஆர்வத்தையும், நீல நிறம் சுதந்திரம் மற்றும் உத்வேகத்தை குறிக்கும் வகையிலும் இடம் பெற்றுள்ளது. மேலும் இலச்சினையைச் சுற்றி அமைந்துள்ள வட்ட வடிவம் தமிழ்நாடு விளையாட்டுத் துறை முன்னேற்றத்தின் சான்றாக வடிவமைக்கப்பட்டுள்ளது.என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்