மகன் பகிர்ந்த புகைப்படம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளக்கம்
தனது மகனின் சொந்த விஷயங்களை கேள்வி கேட்க யாருக்கும் உரிமை இல்லை என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை,
கண்ணை நம்பாதே படம் சார்ந்த நேர்காணலில் அவரது மகன் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், 18 வயதான தனது மகன், அவரது தோழியுடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்ததாக குறிப்பிட்டார்.
இது அவரது சொந்த விஷயம் எனவும், இதில் தலையிட எங்களது குடும்பத்தாரை தவிர வேறு யாருக்கும் உரிமை இல்லை எனவும் தெரிவித்தார். தங்களது மகனுக்கு முழு சுதந்திரம் கொடுத்துள்ளதாகவும், இதனை கேலி செய்வதை எல்லாம் பெரிதாக எடுத்துக்கொண்டால் வாழ்க்கையை நகர்த்த முடியாது என தெரிவித்தார்.
18 வயது சிறுவனுக்கான சுதந்திரத்தை கொடுக்க வேண்டும் என்பதையே தனது மனைவி கிருத்திகா வலியுறுத்தியதாகவும் உதயநிதி தெளிவுப்படுத்தினார். தனது மகனை யாருடனும் ஒப்பிடாதீர் எனவும் அவர் குறிப்பிட்டார்.